TA/760203 - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "யார் ஒருவர் கிருஷ்ண உணர்வில் இருக்கிறாரோ, யார் கிருஷ்ணரை அறிந்திருக்கிறாரோ, அவரே குரு ஆவார். மற்றபடி எல்லாரும் முட்டாள்கள். நீங்கள் ஏன் ஒரு முட்டாளிடம் செல்ல வேண்டும்? யார் கிருஷ்ணரிடம் முழுமையாக சரணடைந்திருக்கிறாரோ, அவர்தான் குரு என்பதை நீங்கள் உடனடியாகப் புரிந்து கொள்ளலாம். மற்றவர்களா? அவர்கள் அனைவரும் முட்டாள்கள்.ந மாம் துஷ்க்ருதினோ மூடா: ப்ரபத்யந்தே நராதமா: (ப.கீ 7.15 (1976)).யார் கிருஷ்ணரிடம் சரணடையவில்லையோ, அவர் இந்த நான்கு பிரிவுகளுக்குள் அடங்குவார்: துஷ்க்ருதினா (தீயவர்கள்), மூடா (முட்டாள்கள்), நராதமா (மனிதர்களில் கடைசியானவர்கள்), மாயயாபஹ்ருத-ஞானா (மாயையினால் அறிவை இழந்தவர்கள்). அவர்கள் எவ்வளவு பெரிய அறிவைப் பற்றி பேசினாலும், அவர்கள் முட்டாள்களே, ஏனென்றால் அவர்கள் கிருஷ்ணரிடம் சரணடையவில்லை. மாயாவாதிகள் அனைவரும் முட்டாள்கள். அவர்கள் சரணடையவில்லை. இதுதான் அதற்கான சோதனை. பகவத் கீதையிலிருந்து நீங்கள் ஏன் பாடம் கற்றுக் கொள்ளக்கூடாது?யார் கிருஷ்ணரிடம் சரணடைந்திருக்கிறாரோ, யார் கிருஷ்ணரின் சேவகனோ, அவரே குரு ஆவார்." |
| 760203 - காலை உலா - மாயாப்பூர் |