TA/760119 - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "நரசிம்மதேவர் அவருக்கு (பிரகலாத மகாராஜருக்கு) ‘உனக்கு என்ன வேண்டுமோ கேள்’ என்று வரங்களையும் ஆசிகளையும் வழங்க விரும்பினார். ஆனால் பிரகலாதர் அதை மறுத்துவிட்டார். அவர் கூறினார்: 'உங்களிடமிருந்து ஏதேனும் ஆதாயத்தைப் பெறுவதற்கு நான் ஒன்றும் வியாபாரப் பக்தன் அல்ல. ஆனால், நான் கேட்கும் முதல் வரம் என்னவென்றால், உங்களுடைய சேவகரான நாரத முனியின் சேவையில் என்னை ஈடுபடுத்துங்கள்.' தவ பிருத்ய-சேவாம் (ஶ்ரீ.பா 7.9.28(1976)). 'ஏனெனில் எனது ஆன்மீக குரு எனக்கு ஆசி வழங்கியதால் தான் என்னால் உங்களைக் காண முடிகிறது. எனவே எனது முதல் கடமை அவருக்குச் சேவை செய்வதே ஆகும்.' இதுவே வைஷ்ணவக் கோட்பாடு ஆகும். எனவே அவர் நரசிம்மதேவருக்கு நேரடியாகச் சேவை செய்வதை மறுத்துவிட்டு, தனது ஆன்மீக குருவின் சேவையில் தான் எப்போதும் ஈடுபட வேண்டும் என்ற ஆசியையே வேண்டினார். இதுவே வைஷ்ணவக் கோட்பாடு." |
| 760119 - காலை உலா - மாயாப்பூர் |