Jump to content

TA/760117 - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"புலன்களைக் கட்டுப்படுத்துவது என்பது ஒன்றும் மிகப் பெரிய சாதனை அல்ல. கிருஷ்ணரின் தூய பக்தராக நாம் எவ்வாறு மாறுகிறோம் என்பதே மிகப் பெரிய சாதனை. அது எல்லாவற்றையும் உள்ளடக்கிவிடும். நீங்கள் தங்கத்தைத் தயாரிக்க வேண்டியதில்லை, ஆனால் உங்களுக்குத் தங்கம் தேவைப்பட்டால், கிருஷ்ணர் அதை உங்களுக்கு அனுப்புவார். எனவே நான் ஏன் அதற்காக முயற்சி செய்து என் நேரத்தை வீணடிக்க வேண்டும்? நான் முழுமையாக கிருஷ்ண உணர்வுள்ளவனாக மாறுகிறேன். அதுவே தேவையானது. கிருஷ்ணர்... யோகக்ஷேமம் வஹாம்யஹம் (ப.கீ 9.22 (1976)): 'நான் உங்களுக்கு எல்லாப் பாதுகாப்பையும் தருவேன். உங்களுக்குத் தேவையான அனைத்தையும் நான் வழங்குவேன்,' என்று கிருஷ்ணர் கூறியுள்ளார். எனவே, கிருஷ்ணர் என்னுடைய பாதுகாப்பாளராகவும், வழங்குபவராகவும், எல்லாவற்றிலுமாக இருக்கும்போது நான் அந்த காரியத்தை (பக்தியை) செய்வேன். அவர் எல்லையற்ற ஆற்றல் கொண்டவர், எனவே அவருக்குத் தேவைப்பட்டால்—அவர் அதைச் செய்வார். எனக்கு எதுவும் தேவையில்லை. நான்... வெறுமனே ஒரு உண்மையான, தூய பக்தனாக மாற வேண்டும்."
760117 - உரையாடல் - மாயாப்பூர்