Jump to content

TA/760116 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஆ. மோகாஷா மோக-கர்மணோ மோக-ஞான-விசேதஸஹ் (ப.கீ 9.12 (1976)). . . கிருஷ்ணர் மிகவும் எளிமையான ஒரு விஷயத்தைக் கூறுகிறார், 'என்னிடம் சரணடை. நான் உனக்கு அனைத்து பாதுகாப்பையும் தருவேன்.' 'இல்லை, இல்லை. அது சாத்தியமில்லை. நான் என் சொந்த விருப்பப்படியே (மனம்போன போக்கில்) செயல்படுவேன். நான் ஏன் சரணடைய வேண்டும்?' 'சரி, அப்படியே செய். உன்னுடைய விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான வசதிகளை நான் உனக்குத் தருகிறேன். நீ அதை பெற்றுக்கொள்வாய். நீயே செய். உன்னால் முடிந்ததை முயற்சி செய்து பார். . .' இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. கிருஷ்ணர் நல்ல அறிவுரைகளை வழங்குகிறார்; ஆனால் மனிதனோ அதை ஏற்றுக்கொள்ள மாட்டான். எனவே கிருஷ்ணர் மிகவும் கருணை உள்ளவர், 'சரி, நீ உன் சொந்த வழியிலேயே செய். நான் உனக்கு எல்லா வசதிகளையும் தருகிறேன்' என்கிறார். இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. அந்த வசதிதான் மாயை—அவனுடைய மனமும் மாயையும் தான் அது. அவன் ஆசைப்படுகிறான். அந்த மனமும் மாயையினால் தான் கொடுக்கப்பட்டுள்ளது, அதன் மூலம் அவனை மிகவும் கடுமையாக தண்டிக்க முடியும். எனவே மாயை அவனுக்கு ஒரு மனதைக் கொடுத்துள்ளது: 'இப்போது நீ ஆசைப்பட்டுக் கொண்டே இரு. நீ ஆசைப்பட்டு, ஆசைப்பட்டு முடித்த பிறகு, நான் உனக்கு அதற்கான வசதியைத் தருகிறேன்.'"
760116 - உரையாடல் - மாயாப்பூர்