TA/760115 காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் கல்கத்தா இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| பிரபுபாதர்: . . . தீர்க்கதரிசனம் சொல்வதற்காக, "லாவண்யம் கேச-தாரணம்" (ஶ்ரீ.பா 12.2.6(1976)). இப்போதுள்ள இளம் சிறுவர்கள் அனைவரும் பெரிய பெரிய தலைமுடியை வளர்த்துக் கொள்கிறார்கள். இது ஐந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாகவதத்தில் கணித்துக் கூறப்பட்டுள்ளது: "கலியுகத்தில், மக்கள் நீண்ட தலைமுடியை வைத்திருப்பதன் மூலம் தாங்கள் மிகவும் அழகாக மாறுவதாக நினைப்பார்கள்." (சிரிப்பு) (இடைவெளி)
மதுத்விஷா: கிருஷ்ணரின் காலத்திலும் எல்லாரும் நீண்ட தலைமுடியை வைத்திருந்தார்களே. பிரபுபாதர்: இல்லை. மதுத்விஷா: இல்லையா? கிருஷ்ணர் வைத்திருந்தார், பலராமர் வைத்திருந்தார், மற்றும் கோபால சிறுவர்களும் வைத்திருந்தார்களே. பிரபுபாதர்: நாம் அப்படிப் பார்க்கவில்லை. அது சாதாரணமானது. கிருஷ்ணர் எதையும் செய்யலாம். நீங்கள் கிருஷ்ணரைப் போல் போலியாகச் செய்ய (அனுகரிக்க) முடியாது. |
| 760115 - காலை உலா - கல்கத்தா |