TA/760113 காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் கல்கத்தா இல் வழங்கிய அமிர்தத் துளி
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| தமால கிருஷ்ணர்: “அவர்கள் எப்போதும், இப்படிப்பட்ட கீழ்நிலை மக்களிடையே நீங்கள் பிராமணர்களை உருவாக்குகிறீர்கள் என்று நினைக்கிறார்கள். அதனால் அவர்கள்…”
ஸ்ரீல பிரபுபாதர்: “நான் பிராமணர்களை உருவாக்குகிறேன் என்றால், அவர் எப்படி கீழ்நிலை மனிதராக இருக்க முடியும்?” தமால கிருஷ்ணர்: “அவர் கீழ்நிலை மனிதர் என்று நாங்கள் கருதவில்லை.” ஸ்ரீல பிரபுபாதர்: “இல்லை, இல்லை. ‘நீங்கள் பிராமணர்களை உருவாக்குகிறீர்கள்’ என்று அவர் சொன்னால், அப்படியானால் அவர்கள் எப்படி கீழ்நிலையினர்? தர்க்கரீதியாகப் பார்த்தாலும் இதுதானே?” தமால கிருஷ்ணர்: “அவர் சொல்வது, கீழ்நிலையிலிருந்து உயர்ந்த நிலைக்கு கொண்டு வருகிறீர்கள் என்பதுதான்.” ஸ்ரீல பிரபுபாதர்: “உண்மையில், ஒவ்வொருவரும் பிரம்மன் தான். இந்தப் பந்தப்பட்ட நிலையில், பிரம்மனைப் பற்றிய உணர்வு இல்லாத நிலையில் இருப்பவர்களை, அவர்களின் உண்மையான பிரம்ம நிலைக்கு நாம் கொண்டு வருகிறோம் என்றால், அதில் என்ன தவறு இருக்கிறது?” தமால கிருஷ்ணர்: “அவர்களின் ஆதியான, உண்மையான நிலைக்கு.” ஸ்ரீல பிரபுபாதர்: “ம்.” |
| 760113 - காலை உலா - கல்கத்தா |