TA/760108c காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் நெல்லூர் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "நீங்கள் மனம் போன போக்கில் எதைச் சட்டமாக்குகிறீர்களோ, அதுவே சட்டமாகிவிடுகிறது. உண்மையில் அவர்கள் போராடவில்லை. இந்துச் சட்டம் என்றால் மனு-சம்ஹிதை. எனவே, 'இதைத் தவிர எங்களுக்கு வேறு எந்தச் சட்டமும் தேவையில்லை' என்று அவர்களை யார் வலியுறுத்துகிறார்கள்? மேலும் அந்த இந்து, அந்த வலிமையான இந்து எங்கே இருக்கிறார்? இந்து என்றால் மனு-சம்ஹிதை.
(இடைவெளி) ... மானவே ப்ராஹுர் (ப.கீ 4.1 (1976)) — இந்த மனு. உண்மையான அறிவுரை மனுவிடமிருந்தே வருகிறது. (இடைவெளி) ... 'மனு' என்ற சொல்லிலிருந்தே 'மானவ' என்ற சொல் வந்துள்ளது. அவர் 'மானவ-தர்மம்' என்பதைத் தொடங்கியிருப்பது போல. மானவ-தர்மம் என்றால் மனு (கொடுத்த தர்மம்). அது கூட அவருக்குத் தெரியவில்லை. மனு என்பதிலிருந்து மானவ வந்தது, 'சாது' என்பதிலிருந்து 'சாதவ' வந்தது போல. அவர்களுக்கு இலக்கணம் கூடத் தெரியவில்லை. (சிரிக்கிறார்) இந்தத் தலைவர்களுக்கு இலக்கணம் கூடத் தெரியவில்லை." |
| 760108 - காலை உலா - நெல்லூர் |