Jump to content

TA/760108b உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் நெல்லூர் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இல்லை, அவர்களுக்கு இயற்கை என்றால் என்னவென்று தெரியாது. இயற்கை என்பது ஒரு கருவி, அதை இயக்குவதற்கு ஒரு இயக்குநர் இருக்க வேண்டும். எனவே, அந்த இயக்குநரைப் பற்றி அவர்களுக்குத் தெரியாது. ஒரு குழந்தை மோட்டார் கார் தானாகவே ஓடுகிறது என்று நினைப்பது போலத்தான் இது. அதற்குள் ஒரு ஓட்டுநர் இருக்கிறார் என்பது அந்த குழந்தைக்குத் தெரியாது. விமானம் பறப்பதை குழந்தை பார்க்கிறது. அது தானாகவே செல்வதாக அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அங்கு ஒரு விமானி இருக்கிறார் என்பது அதற்குத் தெரியாது.அதேபோல், இந்த முட்டாள்கள் இயற்கையைப் பற்றி ஆராய்கிறார்கள், ஆனால் இயற்கை என்பது ஒரு கருவி மட்டுமே. அது கிருஷ்ணரால் இயக்கப்படுகிறது. மயாத்யக்ஷேண ப்ரக்ருதிஹ் ஸூயதே ஸ-சராசரம்(ப.கீ 9.10 (1976)). இயக்குநர் இல்லாமல் ஒரு இயந்திரம் வேலை செய்ய முடியாது என்ற நடைமுறை அனுபவம் அவர்களுக்கு உண்டு. இவ்வளவு பெரிய இயந்திரம், ஒரு இயக்குநர் இல்லாமல் எப்படி வேலை செய்கிறது? அது அவர்களுக்குத் தெரியவில்லை."
760108 - உரையாடல் - நெல்லூர்