TA/760107b உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் நெல்லூர் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "பரம் த்ருஷ்ட்வா நிவர்ததே (ப.கீ 2.59 (1976)). நான் அவ்வளவு சிறந்ததாக இல்லாத ஒன்றைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன், ஆனால் எனக்கு அதைவிட மிகச் சிறந்த ஒன்றைச் சாப்பிடும் வாய்ப்பு கிடைத்தால், நான் இந்தத் தாழ்ந்ததை விட்டுவிடுகிறேன். எனவே, அந்த இடத்தை வெறுமையாக்கவோ அல்லது சூன்யமாக்கவோ வேண்டிய அவசியமில்லை. அந்த இடத்தை சிறந்த விஷயங்களால் நிரப்ப வேண்டும்.
ஆகவே, நீங்கள் கிருஷ்ணரைப் பற்றி நினைக்கும் போது, மாயையை மறந்துவிடுகிறீர்கள். இல்லையெனில், நீங்கள் மாயையின் வலையில் சிக்குவீர்கள். கிருஷ்ணர் ஏன், 'மன்மனா பவ மத்பக்தோ' (எப்போதும் என்னைப்பற்றியே நினை, என் பக்தனாக இரு) என்று கூறுகிறார்? 'மாம் ஏவ யே ப்ரபத்யந்தே' (ப.கீ 7.14 (1976)). இதுதான் நமக்குத் தேவை. நீங்கள் 'அன்யாபிலாஷி' (கிருஷ்ண பக்தி அல்லாத வேறு பௌதிக ஆசைகள் கொண்டவர்) ஆன உடனேயே, ஆன்மீகப் பாதை கடினமாகிவிடுகிறது." |
| 760107 - உரையாடல் - நெல்லூர் |