TA/751226 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் Sanand இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "ஒருவர் மனிதராக இருந்தால் ஒழிய யாரால் ஒரு கோட்பாட்டை/கருத்தை முன்வைக்க முடியும்? ஒரு நாயால் எந்தக் கோட்பாட்டையும் முன்வைக்க முடியாது. ஒரு விலங்கால் எந்தக் கோட்பாட்டையும் முன்வைக்க முடியாது. அப்படியிருக்க, இந்த உடலுக்குள் தான் உண்மையான நபர் (ஆத்மா) வசிக்கிறார் என்ற இந்தக் கோட்பாட்டை மேற்கத்திய உலகம் முழுவதும் யார் முன்வைக்கிறார்கள்? இதை யார் புரிந்து கொள்கிறார்கள்?எனவே அவர்கள் அனைவரும் விலங்குகளே. அவர்களின் தத்துவங்கள் என்று சொல்லப்படுபவற்றின் மதிப்பு தான் என்ன? உம்? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? யஸ்யாத்ம புத்திஹ் குணாபே த்ரி-தாதுகே (ஶ்ரீ.பா 10.84.13(1975)). ஒருவன் தன்னை இந்த உடல் சார்ந்த கருத்தியலோடு (நான் தான் இந்த உடல் என்று) அடையாளப்படுத்திக் கொண்டால், அவன் விலங்காகவே நீடிக்கிறான். அவனுடைய ஆய்வறிக்கையின் மதிப்பு என்ன?இப்போது இங்கே ஒரு கோட்பாடு உள்ளது. அதே சமயம் அதற்கு எதிரான ஒரு எதிர்-கோட்பாடும் அங்கே இருக்கிறது. உண்மையில் நாம் இவற்றைச் சீரமைக்க முயன்று கொண்டிருக்கிறோம். நம்முடைய சமூகம் மட்டுமே இதைச் செய்கிறது. கோட்பாடு என்பது 'ஆத்மா', எதிர்-கோட்பாடு என்பது 'உடல்', மற்றும் அவற்றின் தொகுப்பு/இணைப்பு என்பது இந்த உடல் மற்றும் ஆத்மாவிற்கு இடையே எவ்வாறு ஒரு சமநிலையை ஏற்படுத்துவது என்பதாகும்; இதன் மூலம் இந்த உடலின் பந்தத்திலிருந்து ஆத்மா நன்மையடைய முடியும்." |
| 751226 - உரையாடல் - Sanand |