TA/751223 காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "உண்மையான உலகம் என்பது ஆன்மீக உலகமே ஆகும், இங்கே இருப்பது அதன் வெறும் பிரதிபலிப்பு (நிழல்) மட்டுமே. ஆனால் நாம் இதையே உண்மையான உலகம் என்றும், ஆன்மீக உலகம் என்று ஒன்றுமே இல்லை என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். யதா பாஸஹ் ததா தமோ. எனவே தான் சங்கராச்சாரியார் இந்த உலகம் பொய்யானது, ஜகத் மித்யா என்று கூறினார். ஆனால் அதே வேளையில், பிரம்ம சத்யம் என்றும் கூறி அதே தகவலைத் தான் அவரும் அளித்தார். ஆனால் நாமோ இந்த ஜகத்தை (பௌதிக உலகத்தை) உண்மை என்றும், ஆன்மீக உலகம் என்று ஒன்று இல்லை என்றும் எடுத்துக் கொள்கிறோம். இதுவே குறைபாடாகும். இது எதைப் போன்றது என்றால்... (பக்கத்தில் இருப்பவர்களிடம்: அது பரவாயில்லை...) கானல் நீரைப் போன்றது. முட்டாள் விலங்கு பாலைவனத்தில் தண்ணீரைத் தேடி ஓடுகிறது, ஆனால் அங்கே தண்ணீர் இல்லை. அது மாயையில் சிக்குகிறது (மயங்குகிறது). அதற்காக வேறு எங்குமே தண்ணீர் இல்லை என்று அர்த்தமல்ல. வேறு இடத்தில் தண்ணீர் இருக்கிறது, ஆனால் இந்த கானல் நீர் என்பது பொய்யானது." |
| 751223 - காலை உலா - மும்பாய் |