TA/751211 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் விருந்தாவனம் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "அவர்கள் பிரம்மாண்டமான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். ஏன்? ஏனென்றால் அவர்கள் விமூடர்கள், அதாவது முட்டாள்கள். அவர்கள் ஏன் முட்டாள்கள்? அவர்கள் விஞ்ஞானிகளாக இருக்கலாம், தத்துவஞானிகளாக இருக்கலாம். அது எல்லாம் சரிதான், ஆனால் இந்த ஏற்பாடுகளை எல்லாம் செய்த பிறகும், நீங்கள் மாயையின் பிடியில் தான் இருக்கிறீர்கள். நீங்கள் மாயையின் பிடியில் இருந்து விடுபடவில்லை. பிறகு ஏன் உங்கள் நேரத்தை இவ்வாறு வீணடிக்கிறீர்கள்? உங்களால் முடியாது... நீங்கள் அனுபவிப்பதற்காக எதை உருவாக்கினாலும், அதை உங்களால் அனுபவிக்க முடியும் என்ற எந்தவொரு தீர்வையோ அல்லது உத்தரவாதத்தையோ உங்களால் உருவாக்க முடியவில்லை. இல்லை, அது சாத்தியமில்லை. அதை அவர்கள் காண்பதில்லை. அவர்கள் பெரிய பெரிய சாலைகளையும், மோட்டார் கார்களையும், வானளாவிய கட்டிடங்களையும் கட்டுகிறார்கள், ஆனால் அதை உங்களால் அனுபவிக்க முடியும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அது சாத்தியமில்லை. எந்தவொரு கணத்திலும், எல்லாம் முடிந்துவிடும். நீங்கள் தயாரித்த உங்களது வானளாவிய கட்டிடமும், உங்களது பெரிய பெரிய சாலைகளும், உங்களது பெரிய பெரிய மோட்டார் கார்களும் அவை எங்கு தயாரிக்கப்பட்டதோ அங்கேயே தான் இருக்கும், ஆனால் நீங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டுப் போக வேண்டும்." |
| 751211 - சொற்பொழிவு SB 07.06.09 - விருந்தாவனம் |