Jump to content

TA/751128 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் டெல்லி இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"வேதம் என்றால் அறிவு என்று பொருள். எனவே வேதங்களில் இருந்து நீங்கள் பௌதிக மற்றும் ஆன்மீக அறிவு என அனைத்து வகையான அறிவையும் பெற முடியும். அதனால் தான் அது வேதம் (அறிவு) என்று அழைக்கப்படுகிறது. அந்த அறிவு என்னும் மரத்தின் கனிந்த பழமே ஸ்ரீமத்-பாகவதம் ஆகும். வியாஸதேவர் நான்கு வேதங்கள், பதினெட்டு புராணங்கள், 108 உபநிடதங்கள், பின்னர் வேதாந்த-சூத்திரம் மற்றும் பகவத் கீதை அமைந்துள்ள மகாபாரதம் ஆகியவற்றை எழுதிய பிறகுதான் ஸ்ரீமத்-பாகவதத்தை எழுதினார். இந்த எல்லா வைதிக இலக்கியங்களையும் தொகுத்த பிறகும் வியாஸதேவர் திருப்தியடையவில்லை. அதன் பிறகு, அவருடைய ஆன்மீக குரு, பரம புருஷ பகவானின் லீலைகளை விவரிக்குமாறு அவருக்கு அறிவுறுத்தினார். அதுவே ஸ்ரீமத்-பாகவதம் ஆகும்."
751128 - சொற்பொழிவு SB 05.05.01 - டெல்லி