TA/751126 காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் டெல்லி இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| ஹரிகேசா: சரி, துன்பப்படுவதை விட அனுபவிப்பது (இன்பம் காண்பது) எவ்வளவோ மேலானது.பிரபுபாதா: ஆனால் இன்பம் என்பது எங்கே இருக்கிறது? ஒரு திருடனும் அப்படித்தான் நினைக்கிறான், 'நான் திருடி இன்பமாக வாழ்கிறேன்' என்று. அதற்குப் பிறகு, அவன் சிறைக்குச் செல்லும்போது, அவனுடைய இன்பம் முடிவுக்கு வந்துவிடுகிறது. யாராவது உங்களுக்கு நிறைய ரசகுல்லாக்களைக் கொடுத்து, "நீ இந்த ரசகுல்லாக்களைச் சாப்பிடு, சாப்பிட்டு முடித்ததும் நான் உன்னைச் செருப்பால் அடிப்பேன்" என்று சொன்னால், நீங்கள் அதை வாங்குவீர்களா? (சிரிப்பு) இதுதான் (பௌதிக) இன்பம். எந்தவொரு புத்திசாலியும் இப்படிப்பட்ட இன்பத்தை விரும்ப மாட்டான். "இந்த ரசகுல்லாவைச் சாப்பிடு, இதற்குப் பிறகு நீ எத்தனை ரசகுல்லாக்கள் சாப்பிட்டாயோ, அத்தனை முறை உன்னைச் செருப்பால் அடிப்பேன்." நீங்கள் அதைச் சாப்பிடுவீர்களா? |
| 751126 - காலை உலா - டெல்லி |