TA/751124 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "ஜீவா எனப்படும் உயிர்வாழும் பொருளானது, முடியின் நுனியில் பத்தாயிரத்தில் ஒரு பங்கு அளவுள்ள மிகச் சிறிய துகளாகும். கேஷாக்ர-ஷத-பாகஸ்ய ஷததா கல்பிதஸ்ய ச. பரம புருஷ பகவானின் அணுத்துகளான இந்த மிகச் சிறிய துகளுக்கே இவ்வளவு ஆற்றல்கள் (சக்திகள்) உள்ளன. உலகம் முழுவதும் பல்வேறு வகையான உயிர்களையும், பல்வேறு வகையான புத்திசாலித்தனங்களையும் நாம் காண்கிறோம். அது என்ன? அதுதான் ஆற்றல். எனவே, நமக்கே இவ்வளவு ஆற்றல்கள் இருக்கும்போது, பரம புருஷனான கிருஷ்ணருக்கு எவ்வளவு ஆற்றல் இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்." |
| 751124 - சொற்பொழிவு CC Madhya 06.154 - மும்பாய் |