Jump to content

TA/751117 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எல்லாமே பரஸ்ய பிரம்மணஹ் சக்தி (பரப்பிரம்மத்தின் சக்தி). நாம் பார்ப்பவை யாவும், அந்த பரம புருஷ பகவானுடைய பல்வேறு சக்திகளின் வெளிப்பாடே ஆகும். இதற்கு நெருப்பும், அதன் வெப்பமும் வெளிச்சமுமே உதாரணம். அவ்வளவுதான். வெப்பம் என்பது பௌதிக (அறிவியல் சார்ந்த) சக்தி, வெளிச்சம் என்பது ஆன்மீக சக்தி. நீங்கள் வெப்பத்தை உணரும்போதே, அங்கு நெருப்பு இருக்கிறது என்பதை உடனடியாகப் புரிந்துகொள்வதைப் போலத்தான் இதுவும். மேலும், அங்கு வெளிச்சம் இருந்தால், அங்கேயும் நெருப்பு இருக்கிறது என்பதை உங்களால் உடனடியாகப் புரிந்துகொள்ள முடியும். வெளிச்சத்தை உங்களால் பார்க்க முடியும், வெப்பத்தை உங்களால் உணர முடியும். இந்த உணர்தல் அல்லது பார்த்தல் மூலமாகவே, இறைவன் எங்கும் நிறைந்துள்ளார் என்ற உண்மையை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இதுவே உண்மையான புத்திசாலித்தனம்."
751117 - சொற்பொழிவு CC Madhya 20.110-111 - மும்பாய்