TA/751116b காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "தர்மேன ஹின பசுபிஹ் சமன. எப்போது மதம் (தர்மம்) இல்லையோ, அப்போது மக்கள் தொகை வெறும் விலங்கினங்கள், அவ்வளவுதான். அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அங்கு மதம் இல்லாத காரணத்தினால்தான், அரசாங்கம் அவசரநிலையைப் பிரகடனப்படுத்த வேண்டியிருந்தது. (சிரிப்பு) ஏனென்றால் அனைவரும் விலங்குகள். அதனால் அவர்கள் முதலில் விலங்குகளை உருவாக்கினார்கள், பிறகு அவசரநிலையைக் கொண்டு வந்தார்கள். இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. (விலகி நின்று:) ஹரே கிருஷ்ணா. ஏன் அவசரநிலை? மனிதர்கள் இருந்தால், பிறகு ஏன் அவசரநிலை? அனைவரும் விலங்குகள். விலங்குகளைக் கட்டுப்படுத்த உங்களுக்கு சில சிறப்பு நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. அவர்கள் விலங்குகள் என்பதற்கு இதுவே சான்று. இல்லையென்றால் ஏன்? (விலகி நின்று:) ஹரே கிருஷ்ணா. அது நீண்ட காலத்திற்கு முன்பே சொல்லப்பட்டது, தர்மேன ஹின பசுபிஹ் சமன: 'நீங்கள் எப்போது மதத்தை (தர்மத்தை) கைவிடுகிறீர்களோ, அப்போது நீங்கள் விலங்குகளை விடச் சிறந்தவர்கள் அல்லர்.'" |
| 751116 - காலை உலா - மும்பாய் |