Jump to content

TA/751115 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நீங்கள் கிருஷ்ணர் மீது பற்றுக்கொண்டால், இயல்பாகவே பௌதிக (உலகியல்) விஷயங்கள் மீது உங்களுக்குப் பற்றின்மை ஏற்படும். கிருஷ்ணர் மீது எந்த அளவுக்கு நீங்கள் பற்றுக்கொள்கிறீர்களோ, அந்த அளவுக்கு நீங்கள் உலகியல் விஷயங்களிலிருந்து விடுபடுவீர்கள். அதுவே இதற்கான சோதனை. உங்களுக்குப் பசி எடுக்கும்போது, நீங்கள் எந்த அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுகிறீர்களோ, அந்த அளவுக்கு உங்கள் பசி தீர்ந்துவிடுகிறது அல்லவா, அதைப்போலத்தான் இதுவும். இந்த பௌதிக உலகை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்கு இயல்பாகவே இருக்கிறது. நாம் கிருஷ்ணர் மீது பற்றுக்கொள்ளக் கொள்ள, இந்த பௌதிக உலகை நாம் மறந்துவிடுகிறோம். இதுவே பற்று மற்றும் பற்றின்மை ஆகும்.

உங்களால் வெறுமனே பற்றற்று (எதன் மீதும் ஈடுபாடின்றி) மட்டும் இருக்க முடியாது. அப்படி இருந்தால், ஆருஹ்ய க்ரிச்சேண பரம் பதம் ததஹ் பதந்தி அதஹ் – அதாவது, நீங்கள் மீண்டும் கீழே (பௌதிக உலகிற்கு) வீழ்ந்துவிடுவீர்கள். உங்களுக்கு ஏதேனும் ஒரு நேர்மறையான பற்று இருக்க வேண்டும். அந்த நேர்மறையான பற்றுதான் கிருஷ்ணர். அப்போதுதான் இந்த பௌதிக உலகிலிருந்து உங்களால் முழுமையாக விடுபட முடியும்."

751115 - சொற்பொழிவு Hindi and English - மும்பாய்