TA/751110 காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "மனம் புத்தியால் கட்டுப்படுத்தப்படாவிட்டால், அது தொந்தரவு செய்யும். அதன் பின் புலன்கள் தொந்தரவடைந்து, கிளர்ச்சியடையும். பின்னர் நீங்கள் கர்மாவினால் பிணைக்கப்படுவீர்கள். கட்டுப்பாடற்ற புலனின்பம் என்பது கர்ம-பந்தனத்தை (கர்மாவின் விதிகளால் பிணைக்கப்படுவதை) குறிக்கிறது. கர்மாவின் விதிகளால் பிணைக்கப்படுவது என்பது பல்வேறு உயிரினங்களில் பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சி மீண்டும் மீண்டும் தொடர்வதைக் குறிக்கிறது. கர்மணா தைவ-நேத்ரேண ஜந்தோர் தேஹோபபத்தி (ஶ்ரீ.பா 3.31.1(1975)). வெவ்வேறு உடல்கள் என்பது கர்மாவின் விளைவே ஆகும். எனவே, கர்மாவின் இந்த விளைவிலிருந்து உங்களை நீங்கள் காப்பாற்றிக் கொள்ள விரும்பினால், முதலில் செய்ய வேண்டியது மனதைக் கட்டுப்படுத்துவதாகும். மனதைக் கட்டுப்படுத்துவதுதான் யோக முறை. ஆனால், புத்திசாலித்தனம் உள்ள ஒருவர் கிருஷ்ண உணர்வை ஏற்றுக் கொள்கிறார், அதன் மூலம் அவரது மனம் தானாகவே கட்டுப்படுத்தப்படுகிறது." |
| 751110 - காலை உலா - மும்பாய் |