Jump to content

TA/751101c காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் நைரோபி இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நீங்கள் சாப்பிட வேண்டிய அவசியம் கூட இல்லை. சாப்பிடாமல் இருக்கும் எத்தனையோ துறவிகள் (மகான்கள்) இருக்கிறார்கள். அவர்கள் எப்படி வேலை செய்கிறார்கள்? ரகுநாத தாஸ கோஸ்வாமி சாப்பிடுவதே இல்லை. அவர்... ஒரு நாள் விட்டு ஒரு நாள், மிகச் சிறிதளவு வெண்ணெய், அவ்வளவுதான் சாப்பிடுவார். அதுவும் தினமும் இல்லை; ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான்.எனவே, உண்மையில் நாம் சாப்பிட வேண்டிய அவசியமே இல்லை. உண்பது, உறங்குவது, உடலுறவு மற்றும் தற்காப்பு—இவை அனைத்தும் உடலின் தேவைகள். ஆனால் நீங்கள் இந்த உடல் அல்ல. நீங்கள் ஆன்மீக தளத்திற்கு வரும்போது, இந்த நான்கு கொள்கைகளின் தேவையும் அங்கு இல்லை.எனவே, "கடவுளுக்கும் என்னைப்போலவே ஒரு உடல் இருக்கிறது, அதை வளர்ப்பதற்கு அவருக்கும் உணவு தேவைப்படுகிறது" என்று நீங்கள் நினைப்பது உங்களுடைய தவறு. அது உங்களுடைய அறியாமை (முட்டாள்தனம்).அங்கானி யஸ்ய சகலேந்த்ரிய-விருத்திமந்தி. அவருடைய உடல் எவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளது என்றால், அவர் தனது உடலின் எந்தவொரு உறுப்பின் வேலையையும் மற்றொரு உறுப்பின் மூலம் செய்ய முடியும். உதாரணமாக, நம்மால் கண்களால் பார்க்க முடிகிறது. கண்களை மூடிய உடனே, நம்மால் பார்க்க முடிவதில்லை. ஆனால் கிருஷ்ணரால் தனது காதுகளின் மூலமாகவும் பார்க்க முடியும். நீங்கள் கிருஷ்ணரிடம் பிரார்த்தனை செய்த உடனே, உங்களுடைய பிரார்த்தனையின் ஒலியைக் கேட்பதன் மூலமாகவே அவர் உடனடியாக உங்களைப் பார்த்துவிடுகிறார், "ஓ, இதோ என் பக்தன் இருக்கிறான்" என்று உணர்கிறார்."
751101 - காலை உலா - நைரோபி