Jump to content

TA/751101 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நைரோபி இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"முழு பௌதிக உலகம் அல்லது எந்த உலகமாக இருந்தாலும், ஆன்மீக உலகமாக இருந்தாலும், அவை அனைத்தும் பரம சக்திமானின் (இறைவனின்) வெளிப்பாடே ஆகும். சக்திகள் அங்கிருந்து வருகின்றன. சக்தி. . . உங்களிடமும் சக்தி இருக்கிறது; என்னிடமும் எனது சக்தி இருக்கிறது. நீங்கள் உங்கள் முடியை வெட்டுகிறீர்கள்; தானாகவே அந்த முடி மீண்டும் வளரும். அது என்ன சக்தி என்று உங்களுக்குத் தெரியுமா? ஆனால் அங்கு ஒரு சக்தி இருக்கிறது. இல்லையெனில், ஒரு இறந்த மனிதனுக்கு சவரம் செய்தால் மீண்டும் முடி வளராது, இனிமேல் வளரவே வளராது—அவ்வளவுதான். ஆனால் ஒரு உயிருள்ள மனிதன், அவனிடம் அந்த சக்தி இருப்பதன் காரணமாக, இன்று நீங்கள் சவரம் செய்தால், நாளை மீண்டும் அங்கே முடி இருக்கும். இதுதான் ‘அசிந்த்ய சக்தி’ (அறிவினால் எட்ட முடியாத, கற்பனைக்கு அப்பாற்பட்ட சக்தி) என்று அழைக்கப்படுகிறது. அது என்ன சக்தி என்று எனக்கும் தெரியாது, அது என்ன சக்தி என்று உங்களுக்கும் தெரியாது. நாம் சில பகட்டான வார்த்தைகளைப் பேசி ஏமாற்றலாம், 'இந்த செல்கள், அது, இது' என்று பல விஷயங்களைக் கூறலாம், ஆனால் அது நம் கட்டுப்பாட்டில் இல்லை."
751101 - சொற்பொழிவு BG 07.05 - நைரோபி