Jump to content

TA/751029d சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நைரோபி இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நம்முடைய தியானம், அதாவது வைஷ்ணவர்களினுடைய, பக்தர்களினுடைய தியானம் மிகவும் எளிதானது. ஹட-யோகிகள் தியானம் செய்வதற்கு தகுந்த இடத்தையும், ஆசனத்தையும் (அமரும் நிலை) தேர்ந்தெடுக்க வேண்டும். தியானம், தாரணை, ஆசனம்... இதில் ஆசனமும் ஒரு முக்கிய செயலாகும். ஆனால் இங்கோ, வைஷ்ணவ தத்துவத்தில், நீங்கள் எப்போதும், குறைந்தபட்சம் தினமும் பகவானின் விக்கிரகத்தை (தெய்வத்தை) தரிசிக்கிறீர்கள், அதனால், 'நம் கோவில் விக்கிரகம் இப்படித்தான் இருக்கிறது' என்ற ஒரு ஆழமான பதிவு உங்களுக்குள் ஏற்பட்டுவிடுகிறது. அந்தப் பதிவின் மூலம், நீங்கள் எந்த ஒரு செயலும் செய்யாமல் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தாலும் சரி, அல்லது 'ஸ்திதம் வ்ரஜந்தம்'... தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தாலும் சரி, உங்களால் இந்த விக்கிரகத்தை தியானிக்க முடியும். நீங்கள் அமர்ந்திருந்தாலும், நடந்து கொண்டிருந்தாலும் அல்லது நின்றுகொண்டிருந்தாலும்—எந்த நிலையில் இருந்தாலும்—இதில் எவ்வித சிரமமும் இல்லை. ஏனெனில், உங்கள் மனம் கிருஷ்ணரிடத்திலும், கிருஷ்ணரின் திருவுருவத்திலும் நிலைத்திருக்கிறது. எனவேதான், ஆரம்ப நிலை பக்தர்களுக்கு விக்கிரக வழிபாடு (தெய்வ வழிபாடு) மிகவும் அவசியமானதாக இருக்கிறது."
751029 - சொற்பொழிவு SB 03.28.19 - நைரோபி