Jump to content

TA/751029 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் நைரோபி இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பிறவிக்கு பின் பிறவி, பிறவிக்கு பின் பிறவி என நாம் உடல்களை மாற்றிக் கொண்டே இருக்கிறோம், ஆனால் கிருஷ்ணரை மறந்து விடுகிறோம். எனவே, இந்த மனிதப் பிறவியில், நமது உண்மையான நிலையை மீண்டும் புதுப்பித்துக் கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது. இதற்கு நமக்கு அறிவின் உதவி தேவை, அதுவும் முழுமையான அறிவு தேவை. அது வேதங்களில் உள்ளது. அத ஏவ கிருஷ்ண வேத புராண. நம்மிடம் பகவத் கீதை இருந்தும், அதை நம்மால் படிக்க முடிந்தும், நாம் பகவத் கீதையை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளாமல், நம் இஷ்டப்படி தன்னிச்சையாக வாழ்ந்தால், நாம் துன்பப்படுவோம். உங்களால் கிருஷ்ணருடன் ஒத்துழைக்காமல் இருக்க முடியாது; அது உங்கள் வயிற்றுடன் நீங்கள் ஒத்துழைக்காமல் இருக்க முடியாது என்பதைப் போன்றது. இது தான் உண்மை நிலை... நீங்கள் கண்டிப்பாக கிருஷ்ணருடன் ஒத்துழைக்கத் தான் வேண்டும். இதில் மாற்று வழி என்ற பேச்சுக்கே இடமில்லை. உங்களுக்கு இது தெரியலாம் அல்லது தெரியாமல் போகலாம். ஆனால் நீங்கள் கண்டிப்பாக இதைச் செய்ய வேண்டும். இது தான் நிலைமை.இல்லையெனில் நீங்கள் ஒருபோதும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. மேலும், மகிழ்ச்சி தான் உங்கள் வாழ்க்கையின் இறுதி இலட்சியம் ஆகும். அத்யந்திக துக்க நிவிருத்தி."
751029 - உரையாடல் B - நைரோபி