Jump to content

TA/751028b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நைரோபி இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே, 'நான் மிகப் பெரிய மனிதன்,' 'நான் அமைச்சர்,' 'நான் ஜனாதிபதி,' 'நான் இது,' கடைசி நிலையாக 'நான் நாராயணன்' என்றெல்லாம் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். ஆனால் நாம் நிதானமாகச் சிந்தித்துப் பார்த்தால், 'நான் நாராயணன் என்றால், நான் தான் கட்டுப்படுத்துபவனாக (எஜமானனாக) இருக்க வேண்டும். எல்லாவற்றையும் கட்டுப்படுத்துபவனாக நான் இருக்க வேண்டும். ஆனால் நான் ஏன் பல்வலியால் கட்டுப்படுத்தப்படுகிறேன்? பல்லில் சிறிது வலி ஏற்பட்டவுடன், ஒரு பல் மருத்துவரிடம் சென்று என்னை அவருடைய கட்டுப்பாட்டில் ஒப்படைக்கிறேன். அப்படியிருக்க நான் எப்படி நாராயணனாக முடியும்?'

இவ்வாறு ஒருவர் தனது முழு வாழ்க்கையையும் ஆராய்ந்து பார்த்தால், தன்னை விட மேலான ஒன்றால் தான் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படுகிறோம் என்பதை அவர் உணர்ந்து கொள்வார். முழுமையாகக் கட்டுப்படுத்தப்படுகிறோம். அந்தக் கட்டுப்பாடு ஜட இயற்கையினுடையதாகும் (பௌதிக இயற்கையின் கட்டுப்பாடு)."

751028 - சொற்பொழிவு BG 07.02 - நைரோபி