TA/751028 காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் நைரோபி இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "ஒவ்வொருவரும் தன்னை மிக உயர்ந்த ஆளுமை, விஞ்ஞானி, தத்துவஞானி, பெரிய மனிதன் என்று நினைக்கிறார்கள். அதுதான் பௌதிக நோய். உண்மையில் அவர் ஒவ்வொரு நொடியும் தனது புலன்களின் உந்துதல்களால் உதைக்கப்படுகிறார், ஆனால் தன்னை ஒரு பெரிய மனிதன் என்று எண்ணிக்கொள்கிறார். கோ-தாஸன். 'கோ' என்றால் புலன்கள். அவர் எப்போதும் புலன்களின் உந்துதல்களால் அலைக்கழிக்கப்படுகிறார், ஆனால் தன்னை 'சுதந்திரமானவர்' என்று நினைக்கிறார். சுதந்திரமானவர் என்றால் புலன்களின் அடிமை என்று பொருள். இதுதான் நடந்து கொண்டிருக்கிறது.எனவே, நீங்கள் உலகின் உண்மையான நிலையைப் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் பிரசங்கம் செய்ய விரும்பினால், நீங்கள் மரத்தை விட பணிவானவராகவும், புல்லை விட தாழ்மையானவராகவும், மரத்தை விட சகிப்புத்தன்மை உடையவராகவும் இருக்க வேண்டும்... அனைவரும் முட்டாள்கள் என்று நமக்குத் தெரியும்; இருப்பினும், நீங்கள் அவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். அப்போதுதான் எதையாவது சொல்ல முடியும். இல்லையெனில், இது மிகவும் கடினம்." |
| 751028 - காலை உலா - நைரோபி |