Jump to content

TA/751025 காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் மொரீஷியஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எந்தவொரு பெண்ணையும் தாயாகப் பார்க்க வேண்டும். இதுவே கலாச்சாரம். தான் திருமணம் செய்து கொண்ட மனைவியைத் தவிர, மற்ற அனைத்துப் பெண்களையும் தாயாகவே நடத்த வேண்டும். பிரம்மச்சாரிகளுக்கு அவ்வாறுதான் கற்பிக்கப்பட்டது, 'தாயே' (என்று அழைக்க). இதுவே கலாச்சாரம். ஆனால் இவர்கள் சாதாரணமாகப் பிறருடைய மனைவியையும், பிறருடைய பெண்களையும் கடத்திச் செல்லவும், அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளவும் முயற்சிக்கிறார்கள். அதோடு தங்களைப் பண்பாடு உள்ளவர்கள் என்றும் சொல்லிக்கொள்கிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் கலாச்சாரமே இல்லை.

மாத்ருவத் பர-தாரேஷு பர-த்ரவ்யேஷு லோஷ்ட்ரவாத் (சாணக்கிய ஸ்லோகம் 10): 'பிறருடைய பணத்தைத் தெருவில் கிடக்கும் கற்களைப் போலக் கருத வேண்டும்'. யாரும் அதைப் பொருட்படுத்துவதில்லை. பிறருடைய பணத்தை எப்படி அபகரிப்பது என்றுதான் இவர்கள் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். மேலும் ஆத்மவத் சர்வ பூதேஷு: 'உங்களுக்கு இன்பமும் துன்பமும் ஏற்படுவது போல, மற்ற உயிர்களுக்கும் ஏற்படும் என்பதை நீங்கள் உணர வேண்டும்'. உங்கள் கழுத்து அறுக்கப்பட்டால், நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உணர்வீர்களா? அப்படியிருக்க, ஏன் அந்தப் பாவப்பட்ட விலங்குகளின் கழுத்தை அறுக்கிறீர்கள்? கலாச்சாரம் எங்கே இருக்கிறது? கலாச்சாரமே இல்லை. வெறும் அயோக்கியர்களும், திருடர்களும், கயவர்களும், முட்டாள்களுமே இருக்கிறார்கள். கலாச்சாரம் எங்கே இருக்கிறது? கலாச்சாரம் என்பதன் அர்த்தமே அவர்களுக்குத் தெரியவில்லை."

751025 - காலை உலா - மொரீஷியஸ்