Jump to content

TA/751022 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் ஜோகன்னஸ்பேர்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இந்த உடல் தொடர்ந்து இயங்குவதற்கு இனி பயன்படாது என்ற நிலை வரும்போது, இயற்கையினால் மற்றொரு உடல் வழங்கப்படுகிறது. மரணத்தின் போது, (ப.கீ 8.6 (1977)) 'யம் யம் வாபி ஸ்மரன் லோகே த்யஜத்ய அந்தே கலேவரம், ஸதா தத்-பாவ-பாவிதஹ்' என்று பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளவாறு—நாம் ஒரு மனநிலையை உருவாக்குகிறோம். நமக்கு இரண்டு வகையான உடல்கள் உள்ளன: சூட்சும உடல் (நுண்ணுடல்) மற்றும் ஸ்தூல உடல் (பருவுடல்). இந்த ஸ்தூல உடல் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து பருப்பொருள் கூறுகளால் ஆனது; மேலும் சூட்சும உடல் மனம், புத்தி மற்றும் அகங்காரத்தால் ஆனது. நாம் தூங்கும் போது, ஸ்தூல உடல் வேலை செய்வதில்லை, ஆனால் சூட்சும உடல் வேலை செய்கிறது. அதனால் தான் நாம் கனவு காண்கிறோம். எனவே... மரணத்தின் போது இந்த ஸ்தூல உடல் முடிவுக்கு வருகிறது, ஆனால் மனம், புத்தி மற்றும் அகங்காரம் கொண்ட இந்த சூட்சும உடல் என்னை மற்றொரு ஸ்தூல உடலுக்கு கொண்டு செல்லும்."
751022 - சொற்பொழிவு SB 05.05.02 - ஜோகன்னஸ்பேர்க்