TA/751020 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் ஜோகன்னஸ்பேர்க் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "பகவத் கீதையில், ஜன்ம-மிருத்யு-ஜரா-வியாதி-துக்க-தோஷானுதர்சனம்(ப.கீ 13.9 (1975)) என்று கூறப்பட்டுள்ளது. நாம் மகிழ்ச்சியாக இருக்கவும், துன்பங்களை எதிர்த்துப் போராடவும் முயற்சிக்கிறோம். ஆனால், நம்முடைய உண்மையான துன்பங்கள் என்னவென்றால்—நாம் மரணிக்க வேண்டும், மீண்டும் பிறக்க வேண்டும், நோய்களால் பாதிக்கப்பட வேண்டும் மற்றும் முதுமையை ஏற்க வேண்டும் என்பவைதான் என்பதை நாம் அறிவதில்லை. ஜன்ம-மிருத்யு-ஜரா-வியாதி துக்க-தோஷானுதர்சனம். 'நாகரிகத்தின் வளர்ச்சி, கல்வி, அறிவியல் அறிவு மற்றும் பலவற்றின் மூலம் வாழ்க்கையின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க நான் முயற்சிக்கிறேன்' என்று சிந்திப்பதே உண்மையான புத்திசாலித்தனம் ஆகும். அது எல்லாம் சரிதான். ஆனால், என்னுடைய இந்த நான்கு முக்கிய துன்பகரமான நிலைகளான: பிறப்பு, இறப்பு, முதுமை மற்றும் நோய் ஆகியவற்றிற்கான தீர்வு என்ன? இதற்கு நம்மால் எந்தத் தீர்வும் காண முடியாததால், இந்த நான்கு பிரச்சினைகளையும் நாம் ஒதுக்கி விடுகிறோம். நாம் தற்காலிகமான பிரச்சினைகளோடு வாழ்ந்து, அவற்றைத் தீர்ப்பதிலேயே பிஸியாகி விடுகிறோம். இவ்விதமாக, பூனைகள் மற்றும் நாய்களைப் போல, இந்த மதிப்புமிக்க மனிதப் பிறவியை நாம் வீணடிக்கிறோம். இதுதான் நமக்குத் தரப்படும் அறிவுரை. எனவே, நாம் அவ்வாறு செய்யக்கூடாது." |
| 751020 - சொற்பொழிவு SB 05.05.01 - ஜோகன்னஸ்பேர்க் |