Jump to content

TA/751019b காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் ஜோகன்னஸ்பேர்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எங்கேயோ ஒரு வகைப்பாடு இருக்கிறது: 'சோம்பேறி புத்திசாலி, சுறுசுறுப்பான புத்திசாலி, சோம்பேறி முட்டாள் மற்றும் சுறுசுறுப்பான முட்டாள்'. எனவே, தற்போதைய தருணத்தில் (சிரிக்கிறார்) இந்த உலகம் முழுவதும் சுறுசுறுப்பான முட்டாள்களால் நிறைந்திருக்கிறது. ஆனால் முதல் தரமான மனிதன், அவன் சோம்பேறி புத்திசாலி. சோம்பேறியாகவும் அதே சமயம் புத்திசாலியாகவும் இருப்பதுதான் முதல் தரமான மனிதன். இரண்டாம் தரமான மனிதன், சுறுசுறுப்பான புத்திசாலி. மூன்றாம் தரம் என்றால் சோம்பேறி முட்டாள், நான்காம் தரம் என்றால் சுறுசுறுப்பான முட்டாள். முட்டாள்கள் சுறுசுறுப்பாக இருக்கும்போது... இப்போதுள்ள காலத்தில் அவர்கள் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் முட்டாள்கள். குரங்கைப் போல, அது மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். பார்க்கிறீர்களா? மேலும் அவர்கள் குரங்கின் வம்சாவளியாக இருக்கவே விரும்புகிறார்கள், சுறுசுறுப்பான முட்டாள். அவ்வளவுதான். முட்டாள்கள் சுறுசுறுப்பாக இருக்கும்போது, அவர்கள் பேரழிவைத்தான் ஏற்படுத்துகிறார்கள், அவ்வளவுதான். அவனுக்கு சோம்பேறி முட்டாளே எவ்வளவோ மேல், ஏனென்றால் அவன் அந்த அளவுக்கு தீங்கு விளைவிக்க மாட்டான், ஆனால் இந்த சுறுசுறுப்பான முட்டாளோ தீங்கை மட்டுமே விளைவிப்பான். முதல் தரமான மனிதன் சோம்பேறி புத்திசாலி. அவன் வாழ்க்கையின் மதிப்பை அறிந்தவன், அமைதியாகச் சிந்திப்பவன். நம்முடைய பெரிய துறவிகள், மகான்கள் எல்லோரையும் போல, அவர்கள் காடுகளில் வாழ்ந்து, தியானம், தவம் செய்து, புத்தகங்களை எழுதினார்கள். அவர்கள் எல்லோரையும் நீங்கள் சோம்பேறி புத்திசாலிகளாகக் காண்பீர்கள். அவர்கள்தான் முதல் தரமான மனிதர்கள்."
751019 - காலை உலா - Johannesburgo