Jump to content

TA/751015b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் ஜோகன்னஸ்பேர்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"உங்களுக்குத் திருப்தி வேண்டும் என்றால், உண்மையான வாழ்க்கை வேண்டும் என்றால், இதை ஏற்றுக்கொள்ளுங்கள்: யதோ பக்திர் அதோக்ஷஜே. இங்கேயும் அதே விஷயம்தான், அனர்த்தோபஷ... இந்த வியாபாரம், உயிர்வாழ்வதற்கான போராட்டம், 'தகுதியுள்ளதே பிழைக்கும்' என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், உயிர் பிழைத்திருக்க எவருக்கும் தகுதியில்லை. அனைவரும் இறந்துதான் ஆக வேண்டும். யாராலும், மிகப் பெரிய விஞ்ஞானிகளோ அல்லது மிகப் பெரிய தத்துவஞானிகளோ கூட... அவர்களால் உயிர் பிழைத்திருக்க முடியாது. அவர்கள் பல மில்லியன் ஆண்டுகளைப் பற்றிப் பேசுகிறார்கள், ஆனால் தனிப்பட்ட முறையில் அவர்கள் ஐம்பது அல்லது அறுபது ஆண்டுகள் மட்டுமே வாழ்கிறார்கள், அவ்வளவுதான். இதுதான் அவர்களின் நிலை. அவர்கள் 'இருக்கலாம்', 'ஒருவேளை', 'மில்லியன் கணக்கான ஆண்டுகள்' என்று சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள். நீங்களோ ஐம்பது ஆண்டுகள்தான் வாழப் போகிறீர்கள். பிறகு எதற்காக மில்லியன் கணக்கான ஆண்டுகளைப் பற்றிப் பேசுகிறீர்கள்? ஆகவே, இதுதான் அனர்த்தம் (தேவையற்ற செயல்)."
751015 - சொற்பொழிவு SB 01.07.05-6 - ஜோகன்னஸ்பேர்க்