Jump to content

TA/751014c சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் ஜோகன்னஸ்பேர்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"கர்மாவானது நீங்கள் குணங்களுடன் தொடர்பு கொள்வதன் விளைவாகும். இது ஒரு குறிப்பிட்ட வகையான நோய், அந்த நோயின் கிருமிகளை உங்கள் உடலுக்குள் பரப்புவதன் விளைவாக ஏற்படுவதைப் போன்றது. நோய் என்பது இரண்டாவதாக வருவது; முதலாவது—உங்கள் தொடர்பு (தொற்று). மூன்று குணங்கள் உள்ளன. அதுவே பௌதிக இயற்கை. நீங்கள் தமோ-குணத்துடன் தொடர்பு கொண்டால், தமோ-குண உடலைப் பெறுவீர்கள். ரஜோ-குணத்துடன் தொடர்பு கொண்டால், ரஜோ-குண உடலைப் பெறுவீர்கள். மேலும், நீங்கள் சத்துவ-குணத்துடன் தொடர்பு கொண்டால், அதற்கு ஏற்றவாறு ஒரு உடலைப் பெறுவீர்கள். ஆனால், நீங்கள் இந்த எல்லா குணங்களுக்கும் அப்பாற்பட்டு ஆன்மீக நிலையை அடைந்தால், உங்களுடைய அசல் ஆன்மீக நிலையில் நிலைபெறுவீர்கள். இதுவே வழி. எனவே, இந்தத் தாழ்ந்த குணங்களின் தொற்றிலிருந்து நம்மை எவ்வாறு காத்துக்கொள்வது என்பதே நமது கடமையாகும்."
751014 - சொற்பொழிவு SB 01.07.02-4 - ஜோகன்னஸ்பேர்க்