Jump to content

TA/751013b காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் டர்பன் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"அவர் வேத கலாச்சாரத்தையும், பகவத் கீதையையும் நமக்குக் கொடுத்துள்ளார். அதை நீங்கள் ஏன் ஏற்றுக் கொள்ளக் கூடாது? நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், துன்பப்படுங்கள். அவர் தனது உபதேசங்களை வழங்கியுள்ளார். அரசாங்கம் உங்களுக்குச் சட்டத்தைக் கொடுக்கிறது. இப்போது, நீங்கள் அதை மீறும்போது, அரசாங்கம் வந்து உங்களைத் தடுக்குமா? நீங்கள் மீறுகிறீர்கள், அதனால் துன்பப்படுகிறீர்கள். "நான் சட்டங்களை மீறும்போது, அரசாங்க ஆட்கள் வந்து என்னை ஏன் தடுக்க வேண்டும்?" என்று நீங்கள் ஏன் எதிர்பார்க்கிறீர்கள்? ஏன் அப்படி எதிர்பார்க்கிறீர்கள்? அரசாங்கத்தால் உங்களுக்குச் சட்டப் புத்தகத்தை மட்டுமே கொடுக்க முடியும். நீங்கள் அதை ஆலோசித்து அதன்படி நடந்தால், மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் அதற்கு எதிராகச் செயல்பட்டால், அரசாங்க ஆட்கள் உங்களைத் தடுக்க வரமாட்டார்கள். நீங்கள் செய்கிறீர்கள், அதன் பலனைத் துன்பமாக அனுபவிக்கிறீர்கள். கிருஷ்ணர் கூறுகிறார்: "எப்போதெல்லாம் தர்மத்திற்கு சீர்குலைவு ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் நான் வருகிறேன்." அது பொதுவானது, இந்தியாவிற்கு மட்டும் அல்ல. வேத கலாச்சாரம் இந்தியாவிற்கானது மட்டுமல்ல. அது அனைவருக்கும் பொதுவானது."
751013 - காலை உலா - டர்பன்