Jump to content

TA/751013 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் டர்பன் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பலவீனமானவை பலமானவற்றுக்கு உணவாகும். இதுவே இயற்கையின் நியதி, அதாவது ஒரு உயிர்வாழி மற்றொரு உயிர்வாழிக்கு உணவாகிறது. எனவே, ஒரு நபர் மற்றொரு உயிர்வாழியை உண்ணும்போது, அது இயற்கைக்கு மாறானது அல்ல. இது இயற்கையின் விதி. ஆனால், நீங்கள் மனித வடிவிலான உயிர்வாழியாக வரும்போது, உங்களுடைய பகுத்தறிவை நீங்கள் பயன்படுத்த வேண்டும். ஒரு உயிர்வாழி மற்றொரு உயிர்வாழிக்கு உணவு என்பதற்காக... விலங்கினங்களில் சில சமயங்களில் தந்தையும் தாயும் தங்கள் குட்டிகளையே சாப்பிட்டு விடுகின்றன, ஆனால் மனித சமூகத்தின் வரலாற்றில், தந்தையும் தாயும் தங்கள் குழந்தைகளைச் சாப்பிடுவது கவனத்திற்கு வரவில்லை. ஆனால் தாய் தன் குழந்தையைக் கொல்லும் காலம் வந்துவிட்டது. அது ஏற்கனவே வந்துவிட்டது. இது கலியுகத்தின் காரணமாகவே ஆகும்."
751013 - சொற்பொழிவு BG 13.01-3 - டர்பன்