TA/751010 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் டர்பன் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "பிரபுபாதா: எனக்கு நினைவிருக்கிறது, நான் ஒரு சிறுவனாக இருந்தபோது குதித்து ஓடிக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது என்னால் அதைச் செய்ய முடியாது, ஏனென்றால் இப்போது எனக்கு வேறு ஒரு உடல் கிடைத்திருக்கிறது. எனவே, எனக்கு அப்படி ஒரு உடல் இருந்தது என்பதை என்னால் உணர முடிகிறது. இப்போது அந்த உடல் என்னிடம் இல்லை. ஆக, உடல் மாறிக் கொண்டே இருக்கிறது, ஆனால் 'நான்' என்ற நபர் நித்தியமானவன் (அழிவற்றவன்). மிக எளிமையான உதாரணம். உடலின் உரிமையாளரான நான் நித்தியமானவன், உடல் மாறிக் கொண்டே இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள ஒருவருக்குச் சிறிய புத்தி மட்டுமே போதுமானது.
பேராசிரியர் ஒலிவியர்: ம்ம். ஆமாம், ஆனால் அதை ஏற்றுக் கொண்ட பிறகு, அடுத்ததாக ஒரு கேள்வி எழுகிறது: இதன் விளைவுகள் அல்லது தாக்கங்கள் என்ன? பிரபுபாதா: ஆம், அதாவது, நான் இந்த உடல் அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் தற்போதைய தருணத்தில் நான் என் உடலை வசதியாக வைத்திருப்பதில் மட்டுமே ஈடுபட்டுள்ளேன். என்னை பற்றி நான் எந்த அக்கறையும் எடுத்துக்கொள்வதில்லை. இது எப்படி இருக்கிறது என்றால், நான் என் சட்டை மற்றும் கோட்டை ஒரு நாளைக்கு மூன்று முறை துவைத்து சுத்தம் செய்கிறேன், ஆனால் நான் பசியோடு இருக்கிறேன். எனக்கு உணவில்லை, என் சட்டை மற்றும் கோட்டை துவைப்பதற்கான பொருட்கள் மட்டுமே உள்ளன. இந்த அடிப்படை நாகரிகமே தவறானது." |
| 751010 - உரையாடல் - டர்பன் |