Jump to content

TA/751009b காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் டர்பன் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"உங்கள் நம்பிக்கையிலும் நம்பிக்கையின்மையிலும் என்ன இருக்கிறது? 'நீங்கள் நம்பினால் மட்டுமே அது உண்மை' என்ற அறியாமை இருளில் உங்களை நீங்கள் வைத்திருந்தால், நீங்கள் ஒரு முட்டாள், போக்கிரி. உங்கள் நம்பிக்கையை மட்டுமே நீங்கள் சார்ந்திருந்தால், நீங்கள் ஒரு முட்டாள். உங்கள் நம்பிக்கையின் அர்த்தம்தான் என்ன?'நான் நெருப்பைத் தொட்டால் அது என்னைச் சுடாது என்று நான் நம்புகிறேன்.' இந்த நம்பிக்கை என்னைப் பாதுகாக்குமா? நீங்கள் நெருப்பைத் தொட்டால் அது சுடத்தான் செய்யும், நீங்கள் நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி. 'நாங்கள் நம்பவில்லை' என்ற இந்த வாதம் என்ன? இதுதான் உலகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.நீங்கள் இறக்க வேண்டும் என்பது இயற்கையின் விதியாக இருக்கும்போது, 'இல்லை, நான் இறக்க மாட்டேன்' என்று நீங்கள் நம்பினால், அந்த நம்பிக்கை உங்களைக் காப்பாற்றுமா? நீங்கள் இயற்கையின் விதிக்குக் கீழ்ப்படிந்துதான் ஆக வேண்டும். இதை ஏன் நீங்கள் புரிந்து கொள்வதில்லை? நீங்கள் 'நம்புவது' மற்றும் 'நம்பாதது' பற்றிப் பேசுகிறீர்கள்.முழு உலகமும் இப்படித்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது: 'நாங்கள் நினைக்கிறோம்,' 'நான் கருதுகிறேன்,' 'ஒருவேளை,' 'நான் நம்புகிறேன்,' என்று. அறிவியல் எங்கே இருக்கிறது? அறிவியல் உங்களுடைய 'நம்பிக்கை,' 'நம்பிக்கையின்மை,' 'கருதுவது,' 'ஒருவேளை' போன்றவற்றைச் சார்ந்து இருப்பதில்லை. இது அறிவியல் அல்ல. ஆனால் அவர்கள் இப்படித்தான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்."
751009 - காலை உலா - டர்பன்