Jump to content

TA/751004c காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் மொரீஷியஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பாலியல் வாழ்க்கை, அது சட்டவிரோதமானது இல்லை என்றாலும் கூட, அதன் பின்விளைவுகள் வேதனைக்குரியவை. நீங்கள் குழந்தைகளைக் கவனித்துக் கொள்ள வேண்டும். நீங்கள் குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும். அது வேதனையானது. பிரசவத்திற்காக நீங்கள் மருத்துவமனைக்கு பணம் செலுத்த வேண்டும், பிறகு கல்விக்கட்டணம், பிறகு மருத்துவரின் கட்டணம் என எத்தனையோ வேதனைகள். எனவே இந்த இன்பம், அதாவது பாலியல் இன்பம், பல வேதனையான விஷயங்களைத் தொடர்ச்சியாகக் கொண்டது. தாப-கரீ (சை. ச ஆதி 4.63(1975)). அதே இன்ப ஆற்றல் உயிரினங்களிடம் சிறிய அளவில் உள்ளது, அதை அவர்கள் பயன்படுத்திய உடனேயே அது வேதனையாக மாறிவிடுகிறது. ஆனால், அதே இன்ப ஆற்றல் ஆன்மீக உலகில், கிருஷ்ணர் கோபியர்களுடன் நடனமாடும்போது, அது வேதனை தருவதில்லை; அது எப்போதும் பேரின்பத்தை அளிப்பதாகும்."
751004 - காலை உலா - மொரீஷியஸ்