TA/751004 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மொரீஷியஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "கிருஷ்ணர் கூறுகிறார்: 'தேஹினோ அஸ்மின் யதா தேஹே கௌமாரம் யௌவனம் ஜரா, ததா தேஹாந்தர ப்ராப்திஹ்' (ப.கீ 2.13 (1975)). மரணத்திற்குப் பின் மற்றொரு உடல் மாறுதல் (தேஹாந்தர ப்ராப்திஹ்) இருக்கிறது என்ற தகவல் இங்கே உள்ளது. எனவே, மரணத்திற்குப் பிறகு வாழ்க்கை இல்லை என்று நாம் எவ்வாறு மறுக்க முடியும்? நிச்சயமாக இருக்கிறது.ஆனால் யாரும் இதைப் புரிந்து கொள்ள கவலைப்படுவதில்லை, 'எனது அடுத்த வாழ்க்கை என்ன? என்ன நடக்கப் போகிறது? இன்று நான் ஒரு பெரிய பதவியில் இருக்கலாம், ஆனால் நாளை நான் ஒரு மரமாக மாறப் போனால்...' இப்போது நாம் இந்த அறையில் மிகவும் வசதியாக அமர்ந்திருக்கிறோம். ஆனால் இன்னும் சில வருடங்களுக்குப் பிறகு, அங்கிருக்கும் ஒரு மரத்தை நினைத்துப் பாருங்கள். அவனால் ஒரு அங்குலம் கூட நகர முடியாது; சூறாவளி, சுட்டெரிக்கும் வெயில் என அனைத்திலும் அவன் அங்கேயே நிற்க வேண்டும். ஏன்? நாம் இருவருமே வாழும் உயிரினங்கள் தான். அவனுக்கு ஏன் இந்த உடல் கிடைத்தது, எனக்கு ஏன் இந்த உடல் கிடைத்தது, ஒருவருக்கு என்னை விட ஏன் சிறந்த உடல் கிடைக்கலாம்? ஏன் 84,000,000 (84 லட்சம்) வகையான உயிரினங்களும், வெவ்வேறு நிலைகளும் உள்ளன?இதுபோன்ற எந்த விசாரணையும் இங்கு இல்லை. அத்தகைய அறிவும் இல்லை. அதனால்தான் அவர்கள் இங்கு 'அந்தா' (குருடர்கள்) என்று வர்ணிக்கப்படுகிறார்கள்." |
| 751004 - சொற்பொழிவு SB 07.05.31 - மொரீஷியஸ் |