TA/751003 காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் மொரீஷியஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| பிரபுபாதா: கரும்பு... மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு கரும்பு கசப்பாக இருக்கும். அதுதான் சுவை (அவருக்குத் தெரியும் சுவை). ஆனால் அதுவே மருந்து. எனவே அவர் கரும்பை உட்கொள்ள வேண்டும். அதை உட்கொள்வதன் மூலம், அவருடைய நோய் குணமாகும்போது அவர் உணர்வார், 'ஓ, இது மிகவும் இனிப்பாக இருக்கிறது' என்று.
புஷ்ட கிருஷ்ணா: அப்படியென்றால், இந்த பௌதிக உலகில் வாழ்வதில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்பதை அவர் ஒப்புக்கொள்ள வேண்டும். பிரபுபாதா: இல்லை. தனது மிதமிஞ்சிய பௌதிக மனதின் காரணமாக அவரால் எந்த மகிழ்ச்சியையும் காண முடிவதில்லை. பிரம்மானந்தா: அதுதான் நோய். பிரபுபாதா: அதுதான் நோய். எனவே இதை இந்த பக்தி-யோகத்தின் மூலம் குணப்படுத்த வேண்டும். எனவே பக்தி-யோகத்தில், ஆரம்பத்தில், அது கசப்பாக இருக்கும். அதனால்தான் அவர்கள் (பக்திக்கு) வருவதில்லை. ஆனால் அவர்கள் பக்தி-யோகத்தை ஏற்றுக்கொண்டால், பௌதிக நோய் குணமாகிவிடும், மேலும் அது மிகவும் இனிமையானது என்பதை அவர்கள் காண்பார்கள். புஷ்ட கிருஷ்ணா: ஆம். |
| 751003 - காலை உலா - மொரீஷியஸ் |