Jump to content

TA/751001c சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மொரீஷியஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பிரகிருதி (பௌதிக இயற்கை) நம்மை ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்கு உட்படுத்துகிறது, அதற்கேற்பவே நாம் செயல்படுகிறோம், தன்னிச்சையாக அல்ல. மேலும் இந்த பிரகிருதியும் யாரோ ஒருவருக்குக் கீழ் தான் வேலை செய்கிறது. நீங்கள் சாலையில் செல்லும்போது சிவப்பு விளக்கு மற்றும் பச்சை விளக்கைப் பார்க்கிறீர்கள். சிவப்பு விளக்கைப் பார்த்தவுடனேயே உங்கள் காரை நிறுத்திவிடுகிறீர்கள். இந்த சிவப்பு விளக்கும் பச்சை விளக்கும் ஒரு போலீஸ்காரரால் கட்டுப்படுத்தப்படுகிறது, மேலும் அந்த போலீஸ்காரர் அரசாங்கத்தின் கீழ் பணியாற்றுகிறார்.அதேபோல், இந்த ஒட்டுமொத்த பௌதிக இயற்கையும் சிவப்பு விளக்கு அல்லது பச்சை விளக்கு போலச் செயல்படுகிறது, ஆனால் அந்த சிவப்பு விளக்கு மற்றும் பச்சை விளக்குக்கு பின்னால் ஒரு உன்னதமான பேரறிவு (மூளை) இருக்கிறது. அவரே புருஷோத்தமனான முழுமுதற் கடவுள் ஆவார். எனவே, ஒரு சாதாரண மனிதனோ அல்லது ஒரு குழந்தையோ இந்த சிவப்பு விளக்கும் பச்சை விளக்கும் எப்படிச் செயல்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியாது... அது தானாகவே நடப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். அது அறியாமையாகும். அது தானாகவே நடப்பதில்லை. அதற்குப் பின்னால் ஒரு இயந்திரமும், அதை இயக்குபவரும் இருக்கிறார்கள், அதுவே அறிவுக்கூர்மையாகும்."
751001 - சொற்பொழிவு BG 02.11 - மொரீஷியஸ்