TA/750918 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் விருந்தாவனம் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "பதித: நீங்கள் ஒரு உயர்ந்த இடத்திலிருந்து கீழே விழும்போது... உதாரணமாக, நீங்கள் ஒரு கூரையிலிருந்து கீழே விழலாம், அதுவே பதிதம். ஸ்கலித: நீங்கள் வழுக்கி கீழே விழக்கூடும். பக்னஃ: கீழே விழுவதால் உங்களுடைய எலும்புகள் முறியக்கூடும். பின்னர் ஸந்தஷ்டஹ்: பூனைகள், நாய்கள், பாம்பு போன்ற சில விலங்கினங்களால் நீங்கள் கடிக்கப்படலாம்—வீட்டு விலங்குகள் பல இருக்கின்றன. பின்னர் தப்த: நீங்கள் தீயினால் சுடப்படலாம் (தீக்காயம் ஏற்படலாம்). மற்றும் ஆஹத: மற்றவர்களால் உங்களுக்கு காயம் அல்லது பாதிப்பு ஏற்படலாம்.இந்த இக்கட்டான சூழ்நிலைகளின் போது, நீங்கள் இதை ஒரு நடைமுறைச் சோதனையாக செய்து பார்க்கலாம். அது என்ன சோதனை? ஹரிர் இதி அவஷேண அஹ. 'ஹரே கிருஷ்ண' என்று உச்சரிக்க (ஜெபிக்க) முயற்சி செய்யுங்கள். புமான். யாராவது அவ்வாறு செய்தால், ந அர்ஹதி யாதநாஹ். அந்த காயங்களினால் ஏற்படும் வலியை நீங்கள் உணரவில்லை என்பதை உடனடியாகப் புரிந்துகொள்வீர்கள். இது நடைமுறையில் கண்ட உண்மை (பார்க்கப்பட்ட ஒன்று)." |
| 750918 - சொற்பொழிவு SB 06.02.15 - விருந்தாவனம் |