Jump to content

TA/750915 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் விருந்தாவனம் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஸ வை மனஹ் கிருஷ்ண-பதாரவிந்தயோஹ் (ஶ்ரீ.பா 9.4.18(1976)). நமது கடமை நம் மனதை கிருஷ்ணரின் தாமரை திருவடிகளில் நிலைநிறுத்துவதாகும். எனவே இந்த கிருஷ்ண நாமம், ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தை உச்சரிப்பது நமக்கு உதவும். நாம் உச்சரித்த உடனே, அதைக் கேட்கிறோம். கிருஷ்ணரை வெறுமனே பார்ப்பதன் மூலம் மட்டுமே நீங்கள் முழுமையடைந்து விடுவதில்லை. கிருஷ்ணரைப் பற்றிக் கேட்பதன் மூலமும் அது நிகழ்கிறது. இதுவும் மற்றுமொரு புலனாகும். நாம் பல்வேறு புலன்களின் மூலமாக அறிவைச் சேகரிக்கிறோம்.உதாரணமாக, ஒரு நல்ல மாம்பழம் இருப்பதாக வைத்துக் கொள்வோம். 'மாம்பழம் எப்படி இருக்கிறது என்று பார்க்கிறேன்' என்று நீங்கள் கூறும்போது, நீங்கள் அதை பார்க்க மட்டுமே செய்கிறீர்கள். இல்லை, இந்த பார்ப்பது என்பது முழுமையற்றது. நீங்கள் அந்த மாம்பழத்தின் ஒரு சிறிய பகுதியை எடுத்துச் சுவைக்கும்போதுதான், உங்களால் அதைப் புரிந்து கொள்ள முடியும். எனவே, அனுபவம் என்பது வெவ்வேறு புலன்களின் மூலமாகவே பெறப்படுகிறது."
750913 - காலை உலா - விருந்தாவனம்