TA/750911 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் விருந்தாவனம் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "எனவே நாராயணர் எவ்வளவு கருணைமிக்கவர் என்றால், அவன் (அஜாமிளன்) உண்மையான நாராயணரைக் குறிக்காமல் தன் மகனையே அழைத்தான் — ஆனால் அங்கு நாராயணர் என்ற பெயரின் மீதான அன்பு இருந்தது. அதனால் நீங்கள் விழிப்புணர்வோடு அல்லது அறியாமலோ பகவானின் திருநாமத்தை உச்சரித்தால், அது உங்கள் கணக்கில் (புண்ணியமாக) சேரும் அளவுக்கு நாராயணர் கருணை உள்ளம் கொண்டவர். சில நேரங்களில் நீங்கள் தெருவில் நடந்து செல்லும்போது, மக்கள் 'ஹரே கிருஷ்ண!' என்று சொல்வதைப் போன்றது இது. இதுவும் அவர்களின் கணக்கில் சேர்கிறது. அவர்கள் ஒரு வைஷ்ணவருக்கு தங்களது மரியாதையை செலுத்தும்போது, அது அவர்களின் கணக்கில் சேர்கிறது. ஒருவர் இந்த கோவிலுக்குள் வந்து, தனது நமஸ்காரங்களைச் சமர்ப்பிக்கும் போது, அது அவர்களின் கணக்கில் சேர்கிறது, ஏனெனில் கிருஷ்ணர் கூறுகிறார்: மன்-மனா பவ மத்-பக்தோ மத்-யாஜீ மாம் நமஸ்குரு (ப.கீ 18.65 (1975))." |
| 750911 - சொற்பொழிவு SB 06.02.08 - விருந்தாவனம் |