Jump to content

TA/750906b காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் விருந்தாவனம் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நாம் ஏன் தவம் (தபஸ்யா) செய்ய வேண்டும்?" என்று நீங்கள் கேட்கலாம். நீங்கள் இன்புறுவதாக நினைக்கிறீர்கள், ஆனால் உண்மையில் நீங்கள் இன்புறவில்லை, மாறாக துன்பப்படுகிறீர்கள். நீங்கள் இன்புறுவதாக நினைத்தாலும், அங்கே பல துன்பங்கள் உள்ளன. அதனை அறிவற்ற மக்கள் அறிய மாட்டார்கள். உதாரணத்திற்கு, ஒரு ஆரோக்கியமான மனிதன் "நான் நன்றாக இருக்கிறேன்" என்று நினைக்கிறான், ஆனால் அவன் தற்போது ஆரோக்கியமாக இருந்தாலும், ஒரு நாள் அவன் முதியவனாக மாறுவான், நோயால் தாக்கப்படுவான், இறந்துவிடுவான் என்பதை அவன் பார்க்கவில்லை. ஆனாலும், அவன் "நான் ஆரோக்கியமாக இருக்கிறேன்" என்று நினைத்துக் கொண்டிருக்கிறான்."
750906 - காலை உலா - விருந்தாவனம்