TA/750830 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் விருந்தாவனம் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "கலியுகத்தில் தியானம் என்று சொல்லப்படுவது ஒரு ஏமாற்று வேலையாகும் (போலியானது). ஏனெனில் நாம் எப்போதும் நம் கண்களுக்கு முன்பாக இத்தகைய காமக் காட்சிகளையே காண்கிறோம்; எனவே, இயற்கையாகவே நாம் கண்களை மூடி தியானிக்கும் போது, கிருஷ்ணரையோ அல்லது விஷ்ணுவையோ நினைப்பதற்குப் பதிலாக, பெண்கள் மற்றும் இதர பௌதிக விஷயங்களைப் பற்றியே சிந்திப்போம். எனவே இது சாத்தியமில்லை. கலியுகத்தில் இது சாத்தியமே இல்லை.கிருதே யத் தியாயதோ விஷ்ணும் (ஶ்ரீ.பா 12.3.52(1976)). சத்ய யுகத்தில் விஷ்ணுவின் மீது தியானம் செய்வது சாத்தியமாக இருந்தது, மற்ற விஷயங்களின் மீது அல்ல. ஆனால் இப்போது, இந்த கலியுகத்தில், நாம் பலதரப்பட்ட காம ஆசைகளால் பாதிக்கப்பட்டுள்ளதால் இது சாத்தியமில்லை.எனவே சாஸ்திரம் கூறுகிறது, கிருதே யத் தியாயதோ விஷ்ணும் திரேதாயாம் யஜதோ மகைஹ். நீங்கள் விஷ்ணுவை உணர முடியும், ஏனெனில் விஷ்ணுவே வாழ்க்கையின் இறுதி இலக்காவார். ஆனால் அதை நாம் அறிவதில்லை. ந தே விதுஹ் ஸ்வார்த்த-கதிம் ஹி விஷ்ணும்(ஶ்ரீ.பா 7.5.31(1976))." |
| 750830 - சொற்பொழிவு SB 06.01.63 - விருந்தாவனம் |