TA/750828b காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் விருந்தாவனம் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "பல படித்த மனிதர்கள் தத்துவத்தைப் புரிந்து கொண்டு பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். மக்கள்... இந்த உலகம் முழுவதும், வாழ்க்கையின் மதிப்பை அறியாமல் அறியாமையில் மூழ்கியிருக்கிறார்கள். யஸ்யாத்ம-புத்திஹ் குணபே த்ரி-தாதுகே (ஶ்ரீ.பா 10.84.13(1975)). அவர்கள் இந்த உடலையே ஆன்மா (தான்) என்று ஏற்றுக் கொள்கிறார்கள். ஒட்டுமொத்தப் பிரச்சினையும் அங்குதான் இருக்கிறது. விஞ்ஞானிகள், தத்துவஞானிகள் என்று சொல்லிக் கொள்ளும் அனைவரும், 'நான் இந்த உடல்' என்றுதான் நினைக்கிறார்கள், அதனால்தான் இவ்வளவு சிக்கல்கள் ஏற்படுகின்றன. தான் யார், தன் வாழ்க்கையின் லட்சியம் என்ன, வாழ்க்கையை எவ்வாறு வடிவமைக்க வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. எந்த அறிவும் இல்லை. எனவே, தீவிரமான பிரச்சாரம் தேவைப்படுகிறது." |
| 750828 - காலை உலா - விருந்தாவனம் |