TA/750828 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் விருந்தாவனம் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "எனவே, நீங்கள் உங்களை சாத்விகத் தளத்தில் (நன்மையின் குணம்) வைத்திருந்தாலும் கூட, அங்கிருந்து ரஜோ குணம் (தீவிரம்/ஆசை) மற்றும் தமோ குணத்திற்கு (அறியாமை) வீழ்ச்சியடைவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால், நீங்கள் உங்களை சுத்த-சத்துவத் தளத்தில் வைத்திருந்தால் . . . சுத்த-சத்துவத் தளம் என்பது பக்தித் தொண்டைக் குறிக்கும். சத்வம் விசுத்தம் வாசுதேவ-சப்திதம் (ஶ்ரீ.பா 4.3.23(1975)). சுத்தமான தளம் என்றால் . . . அது வாசுதேவ தளம் என்று அழைக்கப்படுகிறது. வசுதேவரால் எவ்வாறு கிருஷ்ணர் என்ற குழந்தையைப் பெற்றெடுக்க (தோற்றுவிக்க) முடிந்ததோ, அதேபோல, நீங்கள் உங்களை வாசுதேவத் தளத்தில் வைத்திருந்தால்—சத்வம் விசுத்தம் வாசுதேவ-சப்திதம்—அப்போது கிருஷ்ணர் தோன்றுவார். கிருஷ்ணர் தோன்றுவார். எனவே, நம்முடைய இந்த விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் ஒருவரை வாசுதேவத் தளத்தில் நிலைநிறுத்துவதற்காகவே ஏற்பட்டவை ஆகும். நாம் இதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். மேலும், நீங்கள் உங்களை வாசுதேவத் தளத்தில் வைத்திருந்தால், இந்த பௌதிக விஷயங்கள் உங்களைக் கவர்ந்து இழுக்காது. இல்லையெனில் நாம் கவரப்பட்டு வீழ்ச்சியடைவோம். ஆகாம ஹ்ருச்-சய-வசம் சஹஸைவ விமோஹிதஹ்." |
| 750828 - சொற்பொழிவு SB 06.01.61 - விருந்தாவனம் |