TA/750814 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "தூய்மை. எனவே இதுவும் பயிற்சியளிக்கப்படுகிறது—எப்படி தூய்மையாவது, அதிகாலையில் எழுவது, குளிப்பது, வாய் மற்றும் கால்களைக் கழுவுவது எப்படி என்று. குண-ஸம்பன்னஹ. அதன் பிறகு மங்கள ஆரத்தியில் பங்கேற்பது. இதிலும் அவர் பயிற்றுவிக்கப்பட்டார். அயம் ஹி ஸ்ருத-ஸம்பன்னஹ ஸீல-வ்ருத்த-குணாலயஹ். குணம் என்றால் ஸத்-குணம் (நற்குணங்கள்) என்று பொருள், அதாவது சமோ தமோ திதிக்ஷ ஆர்ஜவ, ஞானம் விஞ்ஞானம் ஆஸ்திக்யம் - அமைதி, புலனடக்கம், சகிப்புத்தன்மை, நேர்மை, அறிவு, ஆன்மீக விஞ்ஞானம், ஆத்திகம். இவை குணாலயஹ, அனைத்து நற்குணங்களின் இருப்பிடம். த்ருத-வ்ரத. இந்த விஷயங்கள் எப்போதாவது ஒருமுறை அல்ல, வழக்கமாகச் செய்யப்பட வேண்டும்: த்ருத-வ்ரத. 'நான் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும்'—அதுவே த்ருத-வ்ரத, விரதம் அல்லது சங்கல்பம் எனப்படும். 'நான் இதைச் செய்தே தீருவேன்.' த்ருத-வ்ரதோ ம்ருதுஹ், சாந்தம், மென்மை. இதுவே மனித வாழ்க்கை, பூனைகள் மற்றும் நாய்களைப் போல வாழ்வதல்ல. அது மனித வாழ்க்கை அல்ல. உண்மையான மனித வாழ்க்கையின் சித்திரம் இதோ இங்கே இருக்கிறது. ஒருவன் இந்த எல்லா தகுதிகளையும் பெறுவதற்குப் பயிற்றுவிக்கப்பட வேண்டும்." |
| 750814 - சொற்பொழிவு SB 06.01.56-57 - மும்பாய் |