Jump to content

TA/750811 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் பாரிஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பௌதிகத் தளத்தில், சமத்துவம், சகோதரத்துவம் அல்லது அதுபோன்ற எதற்கும் சாத்தியமே இல்லை. அது சாத்தியமற்றது. நீங்கள் ஆன்மீகத் தளத்திற்கு, அதாவது பிரம்ம-பூத பிரசன்னாத்மா (ப.கீ 18.54 (1975)) நிலைக்கு வராத வரை, சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தைப் பற்றி பேசுவதற்கே இடமில்லை.எனவேதான், ஐக்கிய நாடுகள் சபையில் அவர்கள் அந்த ஒற்றுமைக்காக, அதாவது ஒன்றுபட்ட நாடுகளை உருவாக்க முயற்சி செய்கிறார்கள், ஆனால் ஒற்றுமை எங்கே இருக்கிறது? ஒவ்வொரு வருடமும் அங்கே ஒரு புதிய கொடி (புதிய நாடு) வந்து கொண்டே இருக்கிறது. அங்கு சகோதரத்துவம் அல்லது சமத்துவத்திற்கு பேச்சே இல்லை. விலங்குகளின் வாழ்க்கையில் எப்படி சகோதரத்துவம் அல்லது சமத்துவத்திற்கு இடமில்லையோ, அதேபோல்தான் இதுவும்.அதேபோல், நாம் நம்மை உடல் சார்ந்த வாழ்க்கை நோக்கில் வைத்திருந்தால், அது விலங்கு வாழ்க்கையாகும். "நான் ஒரு பிரெஞ்சுக்காரன், நான் ஒரு ஜெர்மானியன், நான் ஓர் ஆங்கிலேயன், நான் ஓர் இந்தியன்" என்று இன்னும் பல தேசிய அடையாளங்களுடன் நம்மை நாம் நினைத்துக் கொண்டிருக்கும் வரை, அங்கே எந்தவொரு சகோதரத்துவமோ, சமத்துவமோ இருக்க முடியாது. நாம் கிருஷ்ண உணர்வுத் தளத்திற்கு அல்லது பிரம்ம-பூத நிலைக்கு வரும்போதுதான், அங்கே உண்மையான சகோதரத்துவமும் சமத்துவமும் நிலவும்."
750811 - சொற்பொழிவு Arrival - பாரிஸ்