TA/750806 காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் டெட்ராய்ட் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "தமோ-குணம் என்பது சோம்பலையும் தூக்கத்தையும் குறிக்கிறது. சூத்திரர்கள் சோம்பலிலும் தூக்கத்திலும் இருக்கிறார்கள். உணவுக்கு ஏதாவது கிடைத்தால் அவர்கள் வேலை செய்ய மாட்டார்கள். இதுவே சோம்பல். அல்லது சாப்பிட்டுவிட்டு தூங்குவது - இது தமோ-குணம். ரஜோ-குணம் என்றால், புலனின்பத்திற்காக அவர்கள் உழைக்கிறார்கள். அதுவும் பயனற்றது. தமோ-குணம் சோம்பல் மற்றும் தூக்கத்தைக் குறிக்கிறது, ரஜோ-குணம் முட்டாள்தனமாக அல்லது புலனின்பத்திற்காக உழைப்பைக் குறிக்கிறது. மேலும், சத்வ-குணம் என்பது எவ்வாறு சரியாக வேலை செய்ய வேண்டும் என்பதை அறிவதைக் குறிக்கிறது. எனவே, இந்த சத்வ-குணத்திற்கு மேலே, அவர்கள் கிருஷ்ணரின் பக்தர்களாக மாறி கிருஷ்ணருக்காக உழைக்கிறார்கள்.எனவே, கிருஷ்ணருக்காக உழைக்காமல், ஒவ்வொருவரும் இந்த பௌதீக இயற்கையின் குணங்களின் மாயையில் சிக்கியிருக்கிறார்கள். கிருஷ்ணருக்காக எவ்வாறு உழைக்க வேண்டும் என்ற எந்தப் பயிற்சியும் இங்கு இல்லை. அதுவே நவீன நாகரிகத்தின் குறைபாடாகும்." |
| 750806 - காலை உலா - டெட்ராய்ட் |