TA/750803c சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் டெட்ராய்ட் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "ஒருவர் பிரம்ம-பூத நிலையை (ஆன்மீக உணர்வை) அடைந்த உடனே, அவர் உடனடியாக பிரசன்னாத்மா, அதாவது எல்லையற்ற மகிழ்ச்சி கொண்டவராக மாறிவிடுகிறார். ஒரு நபர் ஏதேனும் ஒரு நோயால் பாதிக்கப்பட்டு, ஏதோ ஒரு வழியில் அந்த நோயிலிருந்து விடுபடும்போது, அவர் உடனடியாக எவ்வாறு மகிழ்ச்சியடைகிறாரோ, அதைப் போன்றது இது. அதுதான் தேவை. அதுதான் விரும்பத்தக்கது. பிரம்ம-பூத: பிரசன்னாத்மா (ப.கீ 18.54 (1975)). ஒருவர் மகிழ்ச்சியான நிலையை அடையும் போது, அந்த மனப்பக்குவத்தில் மட்டுமே அவரால் பகவானின் பக்தித் தொண்டில் ஈடுபட முடியும்; எப்போதும் துன்பங்கள் நிறைந்த பௌதிக நிலையில் (இந்த உலக வாழ்வில்) அதைச் செய்ய முடியாது. துக்காலயம் அசாஸ்வதம்(ப.கீ 8.15 (1975))." |
| 750803 - சொற்பொழிவு SB 06.01.50 - டெட்ராய்ட் |